Blog Archives

Model for Muslim women

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.

கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:

1.கணவனுக்கு கட்டுப்படுதல்:

எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)

2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)

3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)

4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:

நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ரகசியம் காத்தல்:

கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.

விருந்தோம்பல்:

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.

அப்போது அல்லாஹ் ‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.

இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்:

ஒருமுறை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் தன் மனைவியுடன் மக்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வயதான பெண்மணி உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நான் உனக்கு பால் கொடுத்த தாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய மனைவியைப் பார்த்து இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தன் மனைவி என்று கூறவும் இவருக்கும் நான் பால் கொடுத்துள்ளேன். இருவரும் சகோதர சகோதரி முறையல்லவா? நீங்கள் எப்படி கணவன் மனைவியாக வாழலாம்? என்றார்கள். உடனே உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் மதீனா சென்று நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்தை கூறி மார்க்க தீர்ப்பு கேட்க, நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணம் செல்லாது, எனவே உறவை முறித்துக் கொள்ளுங்கள் என்று கூற, அவர் தன் மனைவியிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வுக்காக பிரிந்து விடுவோம் என்றார். அன்பாக, ஒற்றுமையாக அவர்கள் அல்லாஹ்வுக்காக தன் திருமண உறவை முறித்துக் கொண்டார்கள். (புஹாரி)

குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:

எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.

யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள் என்று

அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:69)

தர்மம் செய்தல்:

‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக

கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி)

உண்மை பேசுதல்:

உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.

மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:

சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:

கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை வளர்ப்பு:

குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய

கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Elangakurichy Outer Area

Elangakurichy Photos

Elangakurichy to Azad Road

 

இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?

எஸ்.எம்.இதயத்துல்லா, தமிழக அமைப்புச் செயலர், அகில இந்திய காங்கிரஸ். : தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன. சென்னை காயிதே மில்லத் கல்லூரிக்கும், மதுரை வக்பு போர்டு கல்லூரிக்கும் 50 ஏக்கர் நிலம் வழங்கி, கல்லூரி கட்டிக் கொடுக்கப்பட்டது. ஷேக் மற்றும் சையது போன்ற இனங்களைத் தவிர, உருது முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்து, உலமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கி நல வாரியம் அமைக்கப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கப்பட்டது; சிறுபான்மை கமிஷன் அமைத்தது; அதற்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்து, கடன் உதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, மூன்றே மாதங்களில் அரசாணை வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீட்டில் வந்த ரோஸ்டர் பிரச்னை சரி செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம் அமைத்து மாவட்டந்தோறும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை தி.மு.க., அரசு வழங்கியது.

பிற மாநிலங்களில் வழங்கப்படாத சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதற்காக மாநில அரசின் 25 சதவீதத்தை தி.மு.க., அரசு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் உருவான திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு திருத்தம் வழங்கப்பட்டது.கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அரசு சம்பளம் வழங்கியது. சமச்சீர் கல்வி முறையில் அரபி, உருது போன்ற சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த பிரச்னையையும் தி.மு.க.,வே தீர்த்து வைத்துள்ளது.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவைப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளாட்சித் துறையே அதிகாரம் வழங்கலாம் என, சமீபத்திய தேர்தல் அறிக்கை மூலம் தி.மு.க., தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டு முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்தவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி முஸ்லிம்களை முதல்வர் கருணாநிதி பெருமைப்படுத்தினார். ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், மற்ற கட்சிகளை விட கூடுதல் எம்.எல்.ஏ., சீட்டுகள் வழங்கி பரிவு காட்டி வருகிறார்.

இட ஒதுக்கீடு மூலம் நான்கு மடங்கு பொறியியல் கல்லூரி இடங்களும், மூன்று மடங்கு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. எனது கோரிக்கையை ஏற்று, 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர்.

ஆனால், அ.தி.மு.க., அரசு சிறுபான்மையினரை தண்டிக்கும் வகையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. முஸ்லிம்களின் பாரம்பரிய தொகுதியான வாணியம்பாடி இடைத்தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சீட் வழங்கவில்லை. ஆந்திராவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார். நான்கு ஆண்டுகளாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் இல்லாமல் அ.தி.மு.க.,வின் முந்தைய ஆட்சி நடந்தது.

எஸ்.எம்.பாக்கர், தேசிய தலைவர், தவ்ஹீத் ஜமாஅத் கட்சி. : நான் தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை. உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.

முஸ்லிம்களுக்கு ஜீவாதார பிரச்னை இட ஒதுக்கீடு குறித்து, 1997ம் ஆண்டு லத்தீப், சட்டசபையில் கருணாநிதியிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு, “லத்தீப் பாய்! என்னை குழப்ப பார்க்கிறீர்கள். முடியாது என்று உங்களுக்கு தெரியாதா’ என்று கேட்டவர் தான் கருணாநிதி.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, ஆணையத்தை கலைத்துவிட்டு, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைத்து, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

“நாங்கள், 156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலிருந்து எங்களை தனியாக பிரித்துவிடுங்கள்’ என்று கேட்டதற்கு, முடியாது என்று கருணாநிதி சொல்லிவிட்டார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை 7 சதவீதம் ஆக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். பயன் ஏதுமில்லை. தி.மு.க., அரசில், முஸ்லிம்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. தேர்தல் நெருங்கியதும், 5 சதவீத இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.

வக்பு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சியில், தி.மு.க., அறிவாலயம் கட்டியுள்ள இடத்தில் வாகன நிறுத்தம் உள்ள இடம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. அதை, அந்த இடத்தை வைத்திருந்தவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.

ஜெயலலிதா, சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் மிகப்பெரிய சாதனை, முஸ்லிம்களை தீவிரவாதி என 1996ம் ஆண்டு கருணாநிதி சொன்னது தான். 1996ம் ஆண்டு கோவையில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லவில்லை. 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது.

கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லியிருந்தால் அனைவரிடமும் சமாதானம் நிலவியிருக்கும். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 164 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை தவிர மற்றவர்கள், 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்று கருணாநிதிக்கு தெரியாதது இல்லை.

 

 

Ponnaniyaru Dam Photos

Elangakurichy Agricultural Fields

Sheikh Zayd Mosque in Abudhabi

Palanibaba in elangakurichy

Elangakurichy on Kumudam Article

சவூதி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா என வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிறப்பு இளங்காக்குறிச்சி கிராமத்திற்கு உண்டு. அதைவிட இன்னொரு சிறப்பு தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் கிராமம் இது என்பதுதான். திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்திருக்கும் பச்சைப்பசேல் மலை அடிவார கிராமம் என்பது கூடுதல் சிறப்பு.
ஒரு காலத்தில் புகையிலை விற்பனைதான் இவர்களின் தொழிலாக இருந்திருக்கிறது. இன்று விவசாயம், செங்கல் சூளை, சுண்ணாம்புக் கால்வாய், மிட்டாய் கம்பெனி, காண்ட்ராக்ட், வெளிநாட்டு வேலை என்று இளங்காக்குறிச்சிக்கு முகங்கள் பல. கூலி வேலையில் தொடங்கி டாக்டர், இன்ஜினீயர் வரை பல்வேறு விதமான விருப்ப வேலைகளை உள்ளூரிலேயே பார்க்கின்ற ஆண்களையும் காண முடிகிறது.

பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அதே சமயம், கணவரது வருமானத்தை மட்டும் சார்ந்தும் இருப்பதில்லை.
‘‘எங்களால் இயன்ற தையல், திருப்பூரிலிருந்து வரவழைக்கப்படும் பனியன் துணியிலிருந்து நூலெடுத்தல், ஆடு கோழி வளர்த்தல் என பல்வேறு விதமான வேலைகளையும் நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்” என்கிறார் சையது மீரா ஜானு.

மேலும், ‘‘எங்க ஊர்ல பெண்களோட கர்ப்ப காலம் மட்டும்தான் ரொம்பவே சிரமமான ஒண்ணு. துணை சுகாதார நிலையம்தான் இருக்கு. அதிலும் மருத்துவர்களே இல்லாததால் மருத்துவமனையை பத்திச்  சொல்ல வேண்டியதே இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவதொரு ஆத்திர அவசரம்னா வையம்பட்டிக்குதான் தூக்கிட்டு ஓட வேண்டியிருக்கு” என்கிறார்.

‘‘புகையிலைத் தொழில் நசிஞ்சு போன பிறகு மிட்டாய் கம்பெனிகள் தான் எங்களுடைய வாழ்வாதாரமா இருக்கு. கடலைமிட்டாய், மைசூர்பாகு, தேன்மிட்டாய்னு ஊரைச் சுத்தி நிறைய மிட்டாய் கம்பெனிகள் இருக்கு” என பரவசப்படுகிறார் அப்துல் மாலிக்.

சையது பீவி என்கிற எண்பது வயது மூதாட்டியோ, ‘‘பெண்கள் ஐந்து வேளையும் தொழுவது என்பது எங்களிடையே காலங்காலமாக உள்ள பழக்கம். பெரும்பான்மையான பெண்கள் சுயதொழில்களை உருவாக்கிக் கொள்வதால் வீட்டிற்கு வெளியே பார்ப்பது என்பது மிகவும் அரிது. இதனால் தெருக்களும் எப்போதும்  வெறிச்சோடித்தான் இருக்கும்” என்றபடி தொழுகையில் ஈடுபடுகிறார்.

சாலிஹா பீவிக்கு வயது நூற்றுப் பத்து! மகன், மகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளென இவர் வீட்டில் மட்டும் மொத்தம் எண்பது பேர். ஆனால், மூதாட்டியோ இந்த வயதிலும் சோர்ந்து விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பனியன் துணியிலிருந்து நூல் பிரிக்கிறார். நுட்பமான வேலையை நுணுக்கமாகச் செய்கிறார்.

‘‘இளங்காக்குறிச்சியில் மதப் பிரச்னை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை”யென தீர்க்கமான பெருமிதத்தோடு தொடங்குகிறார் முகமது யாகூப்.

‘‘சுத்துப்பட்டுல இருக்கிற எல்லா ஊர்க்காரங்களோடும் ரொம்பவே இணக்கமா இருக்கிறோம். எல்லாரும் ஒரே தாய்ப் புள்ளையாதான் பழகுகிறோம். பங்காளி, மாப்ளைன்னு முறை வச்சுக் கூப்பிடுறோம். அவங்க வீட்டு விசேஷத்து நாங்க போறதும் எங்க வீட்டு விசேஷத்துக்கு அவங்க குடும்பத்தோட வர்றதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகளைப் போலவே தீபாவளி, கிறிஸ்துமஸ்ஸையும் வாழ்த்துச் சொல்லி பகிர்ந்துக்கிறதும் காலங்காலமாக நடந்துட்டு இருக்கு.

காய்கறிச் சந்தைக்குப் போறதிலிருந்து தானியக்கொள்முதல் வரை எல்லா ஊர்க்காரங்களோட வெறும் வர்த்தக உறவு மட்டும் வச்சுக்கலை. ரொம்பவே அன்னியோன்யமாக ஒரு குடும்பமாகவே பழகுறதால மதச் சண்டைங்கிற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.

நல்ல விசயம்தானே!.

– இரா. கார்த்திகேயன், படங்கள் : சுதாகர்.

கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி

கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?
பதில் :

கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للنسائي  – كتاب عمل اليوم والليلة

ثواب من قرأ آية الكرسي دبر كل صلاة – حديث : ‏9585   ‏8603

أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت ” *

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585)

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம். ஆனால் சிலர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹம்மது பின் ஹிம்யர்  என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர இதில் இடம்பெறும் மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.

இவர் விஷயத்தில் மட்டும் இவர் பலவீனமானவர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அறிஞர்களின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சேர்த்துப் பார்க்கையில் இவர்களின் இந்த முடிவு தவறானது என்பதை அறியலாம்.

முஹம்மது பின் ஹிம்யர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் நான் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை என இமாம் அஹ்மது கூறியுள்ளார். இமாம் நஸயீ அவர்களும் இமாம் தாரகுத்னீ அவர்களும் இவரிடம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார்.

இவர் விஷயத்தில் இரண்டு அறிஞர்கள் மட்டுமே குறை கூறியுள்ளனர். இமாம் அபூஹாதிம் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இமாம் அபூஹாதிமைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் ஆவார். இத்துடன் பலகீனத்துக்குரிய காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர் குறித்து இவர் செய்துள்ள விமர்சனம் பல அறிஞர்களின் கூற்றுக்கு முரணாகவும் தெளிவில்லாமலும் இருப்பதால் இதை ஏற்க இயலாது. இவர் குறை கூறுவதில் நடுநிலை பேணாதவர் என்பதால் இவருடைய கூற்றை விட்டுவிட்டு மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பதே சரி.

அடுத்து யஃகூப் பின் சுஃப்யான் என்பவர் முஹம்மது பின் ஹிம்யர் வலிமையானவர் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இந்த அறிஞரின் கூற்றையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

ஆனால் இந்த அறிஞர் செய்துள்ள விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலகீனமடைய மாட்டார். மேலும் இவர் குறித்து நல்ல விதமாகக் கூறியுள்ள அறிஞர்களின் கருத்துக்கு முரணில்லாத வகையில் யஃகூப் பின் சுஃப்யான் அவர்களின் விமர்சனத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

லைச பில் கவீ என்ற அரபுச் சொல்லை இவர் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் மோசமான மனனதத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக இலேசான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொண்டது என்று ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையில் உறுதியான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படுவதைப் போன்று இலேசான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகளும் ஏற்கப்படும். முரண்பாடுகள் வரும் போதே இத்தகையவர்களின் அறிவிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படும்.

உறுதியான மனனத் தன்மை கொண்டவர்களுக்கு அடுத்த அந்தஸ்தை  இலேசான மனனத் தன்மை கொண்டவர்கள் பெறுகின்றனர். அறிவிப்பாளர் ஹிம்யர் முதல் தரத்தைப் பெற்றவர் அல்ல. இரண்டாம் தரத்தைப் பெற்றவர் என்ற கருத்தில் தான் யஃகூப் பின் சுஃப்யான் விமர்சனம் செய்துள்ளார்.

இவரிடம் பிரச்சனை இல்லை என இமாம் நஸாயீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் செய்த விமர்சனமும் இந்த அடைப்படையில் உள்ளவை தான். எனவே இவருடைய விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனராக மாட்டார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் இன்னொரு தவறான வாதத்தையும் வைக்கின்றனர். இவர் தனித்து அறிவித்த எந்தச் செய்தியையும் இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர்.

இது மிகத் தவறான வாதமாகும். ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் அந்த அறிவிப்பாளர் பலவீனராகி விடுவார் என ஹதீஸ் கலையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஹதீஸைத் தொகுப்பவர் எத்தனையோ பல காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து பதிவு செய்யாமல் இருப்பார். பலகீனம் என்பது தான் இதற்குக் காரணம் என இவர்களால் எப்படி அடித்துச் சொல்ல முடியும்?

ஏனென்றால் இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் ஒருவரின் செய்தியைப் பதிவு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எத்தனையோ நம்பகமானவர்கள் இந்தக் கூடுதல் நிபந்தனைக்கு உட்படவில்லை என்பதால் அவர்களிடமிருந்து இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா?

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர் அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் சதூக் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது.